ஆவடி – பிப் -12,2025
Newz -webteam



ஆவடி காவல் ஆணையரகம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு முகாம்
இன்று காலை ஆவடி காவல் ஆணயரகத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார முகாம்களில் காவல் ஆணையாளர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாமில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப., கலந்துகொண்டு பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் காவல் உதவி செயலியின் பயன்படுத்தும் செயல்முறை விளக்கம் குறித்த துண்டு பிரச்சுரம் வழங்கி செயலியை பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடு குறித்த விளக்கங்களை வழங்கி, இச்செயலி குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்ட மாணவிகள் மற்றும் பெண்கள் காவல் உதவி செயலியை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்தனர்.இதுபோன்று ஆவடி பேருந்து நிலையத்தில் கூடுதல் காவல் ஆணையாளர் பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்களும், போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையாளர் அன்பு அவர்களும், திருவேற்காடு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் மகேஸ்வரன், இ.கா.ப., அவர்களும், செங்குன்றம் பேருந்து நிலையத்தில்
செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியயோர் விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை பதிவிறக்கம் செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க துண்டு பிரச்சுரங்களை வழங்கியும், பெண்கள் அவசர காலங்களில் பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0 Comments