


ஆவடி – ஜீலை – 09,2025
Newz – Webteam
ஆவடி காவல் ஆணையரகம்
சுமார் ரூ.18 கோடி மதிப்புள்ள வழக்கு சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
இன்று ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 28 காவல் நிலையங்கள், மத்திய குற்றப்பிரிவு மற்றும் இணையதள குற்றப்பிரிவு ஆகிய சிறப்பு பிரிவுகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் திறம்பட்ட நடவடிக்கைகளால் கடந்த மாதங்களில் களவு போன மற்றும் மோசடி வழக்குகளின் சொத்துகள் பெருமளவில் மீட்கப்பட்டு, திருமுல்லைவாயல் S.M நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆவடி மாநகர காவல் ஆணையாளர் .சங்கர், இ.கா.ப . 28 காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட வழக்கு சொத்துகளான தங்க நகைகள் 696 கிராம் (87 சவரன்), வெள்ளி – 922.989 கிலோ. ரொக்கப்பணம் ரூ.3,96,700/-. செல்போன்கள்-317. இரு சக்கர வாகனங்கள் மற்றும் Air Conditioner 90, காலணிகள் 6050 ஜோடிகள், 04. 61601 மொத்தம் சுமார் ரூ.10,49,98,700/- மதிப்புள்ள வழக்கு சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கினார்
. இதில் குறிப்பாக E4 காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் கன்டெய்னரில் இருந்து வெள்ளி பார் கட்டிகள் திருடப்பட்ட வழக்கில் 15 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.9 கோடி மதிப்புள்ள 922 கிலோகிராம் எடை கொண்ட 30 வெள்ளி பார் கட்டிகள் மீட்கப்பட்டு காவல் ஆணையாளர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய குற்றப்பிரிவில் நம்பிக்கை ஆவண மோசடிகள், நில மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள் உள்ளிட்ட 16 வழக்குகளில் எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்ட வழக்கின் சொத்தான சுமார் ரூ.6,89,77,000/- ரொக்க பணம் மற்றும் இணையதள குற்றப் பிரிவில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என்ற பெயர்களில் பணம் முதலீடு செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டது தொடர்பாக 32 வழக்குகளில் ரூ.57,43,098/- பணம்
மோசடி நபர்களிடமிருந்து மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அதற்குண்டான பெற்று (Remittance Certificates) சான்றிதழ்களையும் காவல் ஆணையாளர் இன்று உரியவர்களிடம் வழங்கினார்
.
மேற்குறிப்பிட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் மொத்தமாக மீட்கப்பட்ட ரூ.17.97.18,798 மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரொக்க பணம் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களால் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரக போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி வழக்கு சொத்துக்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.
0 Comments