கோயம்புத்தூர் – டிச -11,2023
Newz – webteam
கோவை மாநகர காவல்துறையின் மறுப்புசெய்தி
வெளிவந்த தினமலர் செய்தித்தாளில் டீக்கடை பெஞ்ச் பகுதியில் வெளியாகியுள்ள செய்தித்துணுக்கில் கோவையின் ஒரு சில இடங்களில் மாநகர போலீசாரின் சோதனையின் போது சாதாரண உடையில் உள்ள தடைசெய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்களை குண்டர்கள் மாதிரி பயன்படுத்துவதாகவும், அவர்கள் சாலையின் குறுக்கே புகுத்து வாகணஓட்டிகளை திடீர் என்று வழிமறிப்பதாகவும், போலீஸ்காரர்கள் ரோட்டு ஓரமாக நின்று கொண்டு மும்முரமாக அபராதச் சீட்டு எழுதுவதால் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் நிற்பது தெரியாததால் வழிமறிப்பது ரவுடிகள் என்று நினைத்து வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து விழுந்துவிடுவதாகவும் இடம் பெற்றிருந்தது
கோவை மாநகர் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருப்பதாலும் சிறப்பு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் எனப் இருப்பதாலும் தினந்தோறும் 11.00 மணிவரையில் போக்குவரத்து மிருந்து காணப்படுகிறது. இது போக, மிக முக்கியநபர்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட நபர்களும் அடிக்கடி இந்நகருக்கு வருகை புரிகிறார்கள். ஆகவே, சட்டம்.ஒழுக்கு மற்றும் போக்குவாந்து காவலர்களுக்கு துணையாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் முக்கியமான சாலை சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் போக்குவரத்து நிறைந்த இடங்களில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளிலும் தாலுக்கா காவலர்களுடன் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறார்கள். முக்கியமான காலகட்டங்களில் போக்குவரத்து வார்டன்கள் மற்றும் ஊர்க் படையினரும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணிமற்றும் பந்தோபஸ்த் பணிகளிலும்உபயோகப்படுத்தப்படுகிறார்கள் கோவை மாநகரில் நடைபெறும் வாகணத் தணிக்கை மற்றும் போக்குவரைத்து ஒழுங்குபடுத்தும் பணிகளானது சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர்கள் போக்குவாத்து பிரிவைச் சேர்ந்த காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துணைஆனைார்கள் ஆகியோரால் கண்ணிக்கப்பட்டுவருகிறது. தவிர,கோவை மாநகர நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்களாலும் போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல் மற்றும் வாகனச் சோதனை போன்றவைகள் குறைபாடுகளின்றியும் மற்றும் சுணக்கமின்றியும் நடைபெறுகிறதா கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆணையராகிய நானும் அவ்வப்போது திடீர் தணிக்கை செய்து வாகணத் தணிக்கை சுணக்கமின்றி சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்படுவதை உறுதிபடுத்துகிறேன். ஆகவே மேலே கண்ட செய்தித்துணுக்கில் கூறப்பட்டுள்ளளறு தனிநபர்களை உபயோகப்படுத்தியது போன்று எந்த தகவலும் இதுவரை பெறப்படவில்லை. இது போன்ற எந்த சந்தர்ப்பங்களிலும் கோவை மாநகரின் எந்த ஒரு பகுதியிலும் தனி நபர்களையோ அல்லது இளைஞர்களையோ பயன்படுத்தி வாகன சோதனைமேற்கொள்ளப்படுவதில்லை எனவே இந்தச் செய்தி உண்மைக்கு புறம்பானசெய்தியாகும்என்றுதெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments