திருச்சி – நவ -30,2023
newz – webteam
கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்த ரவுடி மற்றும் சட்டத்திற்கு புறம்பாக ஸ்பா நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஆகியோர் இரண்டு் நபர்களை
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,நடவடிக்கை திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது
அதன்படி, கடந்த 13ம்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி பழனிசாமி மகன் வெற்றி (எ) வெற்றிவேல் 31 என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் ரவுடி வெற்றி @ வெற்றிவேல் என்பவர் மீது திருச்சி மாநகரத்தில் கொலை, கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 5 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் வழிபறியில் ஈடுபட்டதாக 4 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் வழிப்பறி செய்ததாக 5 வழக்குகளும், பூட்டியிருந்த வீட்டில் திருடியதாக 2 வழக்குகளும், அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் பணத்தை பறித்த்தாக 3 வழக்குகள் உட்பட மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது.
மேலும் கடந்த 05ம்தேதி கலெக்டர் அலுவலகம் ரோட்டில் உள்ள ஹோட்டலில் ஸ்பா நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திடீர் சோதனை செய்ததில் அங்கு ராஜாகாலனியை சேர்ந்த அருளஂராஜ் மகன் ராம்குமார் 47 மற்றும் நான்கு நபர்கள் பெண்கள் மற்றும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியவர்களை கைது செய்து நீதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, வெற்றி @ வெற்றிவேல் என்பவர் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளையடித்து செல்லும் செயல்களில் ஈடுபவர் எனவும், ராம்குமார் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட நபர்களில் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, இ.கா.ப., இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு
சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் திருச்சி மாநகரில் ஆயுதங்களை காண்பித்து வழிப்பறி செய்வோர், பெண்கள் மற்றும் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments