ஆவடி – ஆகஸ்ட் -06,2025
Newz – Webteam



ஆவடி காவல் ஆணையகணத்திற்க்கு உட்பட்ட இணைவழி குற்றங்கள் மூலமாக பொது மக்கள் இழந்த பணம் சுமார் ரூ.70 லட்சம் மீட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டது
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், இ.கா.ப கொடுத்த புகாரை பெற்று துணை ஆணையாளர் தலைமையகம் மகேஷ்வரன் வழிகாட்டுதலின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் அர்னால்ட் ஈஸ்டர் மேற்பார்வையில் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் பொதுமக்கள் சைபர் மோசடி மூலம் ஏமாந்து பணம் செலுத்திய வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்கு உள்ள வங்கிக் கிளைகளுக்கு கடிதம் கொடுத்து மோசடி நபர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்து மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல்லமுறையில் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் ஆறு வழக்குகளில் மொத்தம் 11 குற்றவாளிகளை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 09.07.2025 முதல் 05.08.2025 வரை மோசடி நபர்களின் வங்கி கணக்குகளில் இருந்து 40 வழக்குகளில் சுமார் ரூ.70,00,000/- பணம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முடக்கம் செய்யப்பட்ட பணத்திற்கு நீதிமன்ற ஆணை பெற்று ஆன்லைன் பங்கு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பகுதிநேர வேலை மூலமாக பணத்தை இழந்த நபர்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (06.08.2025) சசிக்குமார் – ரூ.21,38,115/- கோபால கிருஷ்ணன் ரூ.4,06,000/-, சந்தன் குமார் பாண்டா 5.3,50,000/-, சிவக்குமார் – ரூ.2,09,528/-, ஹேராம் ரூ. 1,89,061/-, வெங்கடரமணி ரூ.1,85,000/-இ கோகிலா நடராஜன் ரூ.1,80,000/-, ஆகியோர்கள் ஆவடி காவல் ஆணையாளரிடம் அதற்குண்டான சான்றிதழ்
நேரடியாக பெற்றுக் கொண்டு ஆவடி காவல் ஆணையாளருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து சென்றனர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் பணத்தை மீட்டு ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் இணையவழி குற்றப்பிரிவு போலீசாரை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
0 Comments