திருநெல்வேலி -ஆகஸ்ட் -28,2024,
Newz -webteam
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ்குமார்மீனா இ.கா.ப., அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி காவல்துறையினர் அளிக்கும் மாநகர சைபர் கிரைம்போதைப்பொருள் பார்சல் FedEx கொரியர் மூலம் சென்றிருப்பதாகவும் மும்பை போலீசார் பேசுவதாகக் கூறி ஸ்கைப் வீடியோ கால் செய்து ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்:சைபர் மோசடி நபர்கள் புதியதாக ஒரு மோசடியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
இதில் குறிப்பிட்ட நபர்களுக்கு போன் மூலம் தொடர்புகொண்டு தங்களின் ஆதார் கார்டு விபரங்களை பயன்படுத்தி FedEx Courier மூலம் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது சம்பந்தமாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து மும்பை போலீசார் பேசுவது போன்று ஸ்கைப் வீடியோ காலில் தொடர்பு கொண்டு எப்ஐஆர் அரஸ்ட் வாரன்ட் போன்ற ஆவணங்களை போலியாக தயார் செய்து அவர்களை ஹவுஸ் அரஸ்ட் செய்திருப்பதாகவும்,
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள் வங்கி விபரங்கள் மற்றும் அவர்களிடம் இருக்கும் பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்லியும் வெரிபிக்கேசன் முடிந்த பின்னர் தங்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக நம்ப வைத்து ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி விவரங்களை பகிர்வோருக்கு பெரும் நிதி இழப்பும் ஏற்படுகிறது.
எஸ்.பி.ஐ. வங்கியின் பெயரை குறிப்பிட்டு பரிசு விழுந்திருப்பதாக கூறி ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்:
போலியான வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகள் பற்றிய பொய்யான செய்திகள் அனுப்புகிறார்கள். ஹேக்கர்கள் இந்த குழுக்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ 6T601 மாற்றுகிறார்கள்.
இந்த பொய்யான செய்திகள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து எஸ்.பி.ஐ. பதிவு புள்ளிகளை கூறுமாறு கூறும் இணைப்புகளை கொண்டிருக்கும் இதனை நம்பி விவரங்களைத் தருவோருக்கு நிதி இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் நெட்வொர்க்குகளில் மொபைல் எண்ணுக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது.
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் இந்த மோசடி தொடர்பாக 73 சைபர் புகார்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டலில் பெறப்பட்டு உள்ளன.
மோசடிக்காரர்கள் முதலில் ஒரு பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனை ஹேக் செய்வதன் மூலம் அவர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கான அனுகலைப் பெறுகிறார்கள். பொய்யான செய்திகளை பாதிக்கப்பட்டவரின் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட குழுக்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் குழுக்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ மாற்றுகிறார்கள். இதனால் செய்திகள் உண்மையானதாக தோன்றுகின்றன. என
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகளை ரிடீம் செய்யுமாறு கூறுவார்கள். பரிசு புள்ளிகள் காலாவதியாக உள்ளதாக கூறி அவசரப்படுத்துவார்கள்.
தாங்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயரில் வரும் போலியான லிங்குகளை அனுப்பி ஏமாற்றுகிறார்கள். பலர் இந்த மோசடியில் சிக்கி விடுகிறார்கள். இத்தகைய போலியான நடவடிக்கையில் திருநெல்வேலி மாநகர மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை கண்டறிந்தால் பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம். சைபர் குற்ற தொலைபேசி உதவி . 1930- உடனடியாக அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் என திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments