

திருநெல்வேலி – ஆகஸ்ட் -04,2025
Newz – Webteam
திருநெல்வேலி மாநகரம்
கடந்த 27.07.25ம் தேதி திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் சரகம், கே.டி.சி. நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் ஒரு சில நபர்களால் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது
.
மேற்படி காணொளியில் உள்ள சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றது ஆகும். மேலும் அந்த காணொலிக்கும் திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இதுபோன்று சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிரும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments