நாகப்பட்டினம் – 27,2024
Newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் கீழையூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்தார்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீழையூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார் அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்
காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தற்சமயம் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளை ஆய்வு செய்தார்.
எதிரிகள் கைதுசெய்யப்படாமல் உள்ள வழக்குகளில், உடனடியாக எதிரிகளை கைது செய்ய அறிவுரைகள் வழங்கினார் கோப்புக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கு சென்று சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து, வழக்குகளை உடனடியாக கோப்புக்கு எடுக்க காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்
மேலும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு மேற்கொண்டார்.மேலும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளில் எதிரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற விசாரணையை விரைத்து முடிக்க கீழையூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்
.காலையிலும், மலையிலும் பகல் நேர ரோந்து அனுப்பி, கூட்டம் உள்ள இடங்களில் ரோந்து காவலர்கள் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிக அளவில் இரவு ரோந்து அனுப்ப வேண்டும் எனவும் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் திருட்டு போன்ற எந்த சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்
0 Comments