திருநெல்வேலி – நவ – 16,2024
Newz – Webteam
மேலப்பாளையத்தில் திரையரங்கத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக வழக்கு பதிவு.
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அலங்கார் திரையரங்கத்தை கொக்கிரகுளம் வசந்தநகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் (49) என்பவர் குத்ததகைக்கு எடுத்து புதிய படங்களை வெளியிட்டு வந்துள்ளார். தற்பொழுது அமரன் மற்றும் கங்குவா திரைப்படங்களை வெளியிட்ட நிலையில் 16.11.2024 தேதி அதிகாலை சுமார் 3 மணிக்கு அளவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றதாக மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
0 Comments