சென்னை ஆவடி – நவ -20,2023
newz – webteam
சி.ஆர்.பி.எப்.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்க்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பூந்தமல்லி நீதிமன்ற அதிரடி தீர்ப்பு
சென்னை திருநின்றவூர் கவரப்பாளையத்தை சார்ந்த பச்சையப்பன் மகன் மதுரை வீரன் இவருக்கு்ம் சென்னை ஆவடி பட்டாபிராம் பகுதியை சார்ந்த கங்கன் மகன் ஏழுமலை என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்த பழக்கத்தின் அடிப்படையில் ஏழுமலை மதுரை வீரனுக்கு சிஆர்பிஎப் படைபிரிவில் வேலை வாங்கிதருவதாகவும் அதற்க்கு ரூ 7,64,000 பணம் தரவேண்டும் என்று மதுரை வீரனிடம் ஆசைவாரத்தை கூறி பணத்தை ஏமாற்றியுள்ளார் மதுரை வீரன் இந்த மோசடி குறித்து ஆவடி மத்திய குற்றபிரிவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் தெரிவித்துள்ளார் ஏழுமலை மீது பொருளாதர மோசடி செய்த குற்றத்திற்க்காக வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டாலின் ஏழுமலை பணத்தை மோசடி செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டது விசாரனையில் தெரிவந்துள்ளது இன்று அவர் அளித்த தீர்ப்பில் குற்றவாளியான ஏழுமலைக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனையும் பாதிக்கபட்ட மதுரை வீரனுக்கு ரூ 6,34000 பணத்தை திரும்ப கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார் . இந்த வழக்கை திறம்பட வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சரத்பாபு மற்றும் இந்த வழக்கை துரிதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ஆய்வாளர் கீதா ஆகியோரை ஆவடி கமிஷனர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்
0 Comments