இராணிப்பேட்டை – 25,2024
Newz – webteam


இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இ.கா.ப., மரக்கன்றுகள் நட்டு மரம் நடுவதை துவக்கி வைத்தார்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள இடங்களில் சுத்தம் செய்து மரக்கன்றுகள், செடிகள் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன் குணசேகரன் (CWC) குமார் (CCW), துணை காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடகிருஷ்ணன் (IUCAW), சீராளன் (மாவட்ட குற்றப் பிரிவு), பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்), .சந்திரலேகா (பயிற்சி), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments