விழுப்புரம் -ஜன – 09,2025,
Newz – Webteam
விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலையம் சாலை பாதுகாப்பு மாதத்தினையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையம் வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இவ் விழிப்புணர்வு பேரணியை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ,தலைமையில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா ஐ.பி.எஸ் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் அமீது, நகர காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கல்பனா, விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் வசந்த், உதவி ஆய்வாளர்கள் குமாரராஜா, விஜயரங்கன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 70 க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரணியில் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் துவங்கி பிரதான சாலைகளான சிக்னல் வழியாக சென்று காந்தி சிலை வழியாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் முடிக்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு பேரணியில் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகன ஓட்ட வேண்டும் மற்றும் சாலை விதிகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.
0 Comments