திருப்பத்தூர் – ஜீலை 26,224
Newz – ameen
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட ஆரிப்நகரை சேர்ந்தவர் சபீர் உசேன். அவரது மனைவி ஷகிலாபானு (30). இவர், அந்த பகுதியில் 9 மகளிர் சுய உதவி குழுவை ஏற்படுத்தி இவைகளுக்கு தலைவியாக இருந்து வங்கியில் பணம் செலுத்துதல், உள்கடன் எடுத்து கொடுத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.
இந்தநிலையில் ஆரிப்நகர் பகுதியை சேர்ந்த முகமது ரபிக்(45) என்பவர் ஷகிலாபானுவிடம் தனியார் வங்கியில், உங்களிடம் இருக்கும் 9 குழுவினருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி இதற்காக அனைவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வாங்கியுள்ளார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 90பேரின் ஆவணங்களை தனியார் வங்கியின் மேலாளரான கௌதம் (33) என்பவர் மூலம் ரூ. 90 லட்சம் லோன் எடுத்துள்ளனர்.
இதில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஒவ்வொருவரின் 90 ஆயிரம் ரூபாயை இருவரும் கையாடல் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் கடன் பெற்ற மகளிர் சுய உதவி குழுவினர் அனைவருக்கும் வங்கி மூலம் ஒரு லட்சம் ரூபாயை வட்டியுடன் செலுத்த நோட்டீஸ் சென்றுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகளிர் சுய உதவி குழுவினர் ஜோலார்பேட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரபிக், வங்கி மேலாளர் கௌதம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 Comments