தூத்துக்குடி – ஜன -01,2024
Newz – webteam
பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று 31.12.2023 மற்றும் இன்று 01.01.2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பணி மற்றும் வாகன சோதனை செய்யும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS., நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்IPS., புத்தாண்டை முன்னிட்டு திருப்பத்தூர் பஸ்நிலையம் அருகே பொதுமக்களுடன் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டை கொண்டாடினார் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments