வேலூர் -பிப் -06,2025
Newz -webteam


சட்டவிரோத செயல்களை தடுக்கவும், போதைப் பொருள்கள் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தலை தடுக்கவும் பேர்ணாம்பட்டு அடுத்த அனந்தகிரி கிராமத்தில் காவல்துறை சோதனை சாவடி இன்று தொடங்கி வைக்கப்பட்டது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டு ஒன்றியம் குண்டலபல்லி ஊராட்சி அனந்தகிரி கிராமத்தில் காவல்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் நா.மதிவாணன் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் அவர்களும்குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் டி.ராமச்சந்திரன்
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
0 Comments