திருநெல்வேலி -அக் -23,2024
Newz -webteam
தமிழக சபாநாயகர் அப்பாவு ஏர்வாடி பேரூராட்சியின் நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தபோது மனு கொடுக்க வந்த பொதுமக்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி அவமதித்த ஏர்வாடி காவல்துறை ஆய்வாளர் சுதா செயல் கண்டிக்கத்தக்கது என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏர்வாடி காவல்துறை ஆய்வாளர் மீதுதகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றும் எஸ்டிபிஐ கட்சி நெல்லை புறநகர் மாவட்டம் என்கிற முகநூல் பக்கத்தில் பதிவேற்றும் செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவல் உண்மைக்கு புறம்பானதாகும்.தமிழக சபாநாயகர் திரு அப்பாவு அவர்கள் ஏர்வாடி பேரூராட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது பல்வேறு தரப்பினர் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஏர்வாடி காவல் ஆய்வாளர் திருமதி. சுதா அவர்கள் சபாநாயகர் அவர்களிடம் மனு அளிக்க வந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நபர்கள் உட்பட பலர் மனு அளித்தனர். பின்னர் சபாநாயகர் அவர்கள் மேடையில் பேச தொடங்கிய பின்னர் வந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சில பெண்கள் மனு அளிக்க வேண்டும் என சொன்னதால் பேசி முடித்த பிறகு மனு அளிக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்
. அவர்களின் கையில் மனுவும் இல்லை. பின்னர் பேசி முடித்த பிறகு மற்றொருவரிடமிருந்து மனுவை பெற்று சபாநாயகர் அவர்களிடம் கொடுத்து அவர் பெற்றுக் கொண்ட பின்னரே சபாநாயகர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் இதனை மாற்றி தவறான செய்தியை எஸ்டிபிஐ சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தவறாக புரிந்து கொண்டு ஏர்வாடி காவல் ஆய்வாளர் அவர்கள் மீது தவறான கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மேற்படி தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
0 Comments