

கன்னியாகுமரி – ஏப் -07,2025
Newz – Webteam
“மனம் திறந்து” காவலர்களுடன் கலந்துரையாடும் திட்டத்தினை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் IPS புதிய முயற்சியான “மனம் திறந்து” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்ட போலீசாருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று துவங்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள அனைத்து போலீசாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் கலந்துரையாடல் செய்யும்படி திட்ட நிரல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்நிகழ்வில் இன்று 18 போலீசார் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உயர்அதிகாரிகள், காவலர்கள் என்ற பாகுபாடு இன்றி கீழ்கண்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.
காவல் நிலைய பணிகளில் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,
காவலர்களின் குடும்ப சூழ்நிலைகள்
காவலர்களுக்கு சரியான முறையில் விடுப்பு அளிக்கப்படுகிறதா
காவலர்கள் தங்களது பணிக்காலத்தில் செய்த சிறந்த பணிகள்,
காவல் மக்கள் பணியை மேம்படுத்த காவலர்களிடம் இருக்கும் யோசனைகள்
காவல்துறை செயல்பாடுகளை மேம்படுத்த செய்ய வேண்டியவை குறித்த கருத்துக்கள்
என்பன பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த “மனம் திறந்து” நிகழ்வானது மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடல் தினமும் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.
0 Comments