தூத்துக்குடி – நவ-03,2024
Newz -webteam
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று (02.11.2024) கொடியேற்றத்துடன் துவங்கி 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.
இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 6 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 27 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி கந்த சஷ்டி திருவிழாவில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசனம் பொதுதரிசனம் என வழிகாட்டி போர்டுகள் வைக்கவும், குடிதண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும், கடற்கரை பகுதியில் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கடலில் கயிறு கட்டியும், கடற்கரையில் ரோந்து வாகனத்தில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களில் போக்குவரத்து பிரிவு காவல்துறை ஆங்காங்கே வழித்தடம் மாற்றம், வழித்தட பாதை உட்பட அனைத்து விவரங்களையும் அறிவிப்பு பலகைகள் மூலம் வைக்கவும் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதிகளில் ஈடுபட்டிருக்கும் போலீசாரின் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்து பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
0 Comments