திருவாரூர் – ஜீன் -14,2023
newz – webteam
திருவாரூர் மாவட்டம், திருந்தறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூமன்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயிலடிதெரு பகுதியில் உள்ள டாக்டர். பிரேம்குமார்தாமய் என்பவரது வீட்டில் 13.05.23-ம் தேதி இரவு பூட்டை உடைத்து கொள்ளை நடைப்பெற்றதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.T.P.சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருந்துறைப்பூார்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R. சோமசுந்தரம் அவர்களது தலைமையில் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர். M.கழனியப்பன், உதவி ஆய்வாளர்கள் R. கணபதி, S. கார்த்திக், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் I. பிரான்சிஸ், காமராஜ் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி மற்றும் கற்றுப்பகுதியில் உள்ள பல கண்காணிப்பு கேமராக்களைகளை ஆய்வு மேற்கொண்டு இரவு கொள்ளையில் ஈடுப்பட்ட 1.பிரவீன்குமார்-30/23, த/பெ, ராவன், முத்துமுதலியார் நகர், தவாகுப்பம், கடலூர் மெயின் ரோடு பாண்டிச்சேரி. 2. செல்வகுமார்-26/23, த/பெ. ராஜன் மேலத்தெரு, அக்கரை வட்டம், ஒரத்தநாடு, தஞ்சாவூர். ஆகிய இரண்டு குற்றவாளிகள் கைது, செய்யப்பட்டனர். மேலும் ஒரு குற்றவாளி தலைமறைவாக உள்ளார்.
மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கொள்ளை போன 92 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 2 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நரிதமாக செயல்பட்டு விரைவில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கவும், விலை மதிப்புள்ள தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments