கோயம்புத்தூர் – டிச -14,2023
Newz – webteam
கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப, மாவட்டத்தில் குற்றங்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறையினருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியும், சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டதில் பேரூர், தடாகம் மற்றும் நெகமம் காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51.342 கிலோ புகையிலை பொருட்கள், 10 கிலோ கஞ்சா மற்றும் சட்டத்திற்கு விரோதமாக போதை ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகள் என அனைத்து சட்ட விரோத பொருட்களையும் பறிமுதல் செய்தும், விற்பனைக்கு வைத்திருந்த மற்றும் பயன்படுத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும்
மேற்படி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை உதவி ஆய்வாளர்கள்-3, முதல் நிலைக் காவலர்கள்-2 மற்றும் காவலர்கள்-7 ஆகியோரின் செயல்களை பாராட்டும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
0 Comments