திருநெல்வேலி – டிச – 05,2024
Newz – Webteam
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் அருகே சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வி.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் இருந்து, தகவல் எதுவும் தெரிவிக்காமல் கேரளாவிற்கு செல்ல முயன்ற 12 வயதுடைய மாணவியை தடுத்து வி.கே.புரம், சிவந்திபுரம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த (ஆட்டோ டிரைவர்) அன்னராஜ் (49) என்பவர் வி.கே.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., அன்னராஜை நேரில் அழைத்து அவருடைய பொறுப்புணர்வை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
0 Comments