தூத்துக்குடி – டிச -31,2024
Newz – Webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025 புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை.
இன்று இரவு மற்றும் 2025ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான புதன்கிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது,
1) தூத்துக்குடியில் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடவோ, குளிக்கவோ அனுமதி இல்லை.
2) புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
3) புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்குமேல் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
4) புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்யப்படும், மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‘வீலிங்” செய்வதும், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும் கூடாது.
5. பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
6. மேலும் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் வாகன தணிக்கையிலும், இருசக்கர வாகன ரோந்தும் மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப உத்தரவின்படி 1000 காவல்துறையினர் மற்றும் 100 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டினை கொண்டாடவும், பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தெரிவித்துள்ளார்.
0 Comments