தூத்துக்குடி – மே -07,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் திடீரென ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டா எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேற்று இரவு முழுவதும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான தலைவன்வடலி சந்திப்பு, தலைவன் வடலி சேதுராஜா தெரு, ஆவரையூர் மற்றும் நரசன்விளை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், காவல் ஆய்வாளர்கள் ஆத்தூர் காவல் நிலையம் பாலமுருகன், கோவில்பட்டி கிழக்கு வனசுந்தர், உதவி ஆய்வாளர்கள் சிவராஜா, செல்வக்குமார் மற்றும் தனிப்பிரிவு உதவ ஆய்வாளர் ரகு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments