திருநெல்வேலி – டிச – 04,2024
Newz – Webteam
சிறப்பு உதவி ஆய்வாளர் வாகன விபத்தில் பலி, காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி
- திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து , தற்போது உதவி ஆய்வாளர் பயிற்சியிலிருந்து வரும் திரு.முத்து அவர்கள் இன்று 04.12.2024-ஆம் தேதி காலை கவாத்து பயிற்சி முடித்து நாகர்கோவில் நான்கு வழி சாலையில் உள்ள அணுகு சாலையில் (Service Road) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதி, படுகாயகளுடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
- இது தொடர்பாக திருநெல்வேலி மாநகரம், போக்குவரத்துப் புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடற்கூராய்வுக்குப் பின், அவரது உடல் முழு காவல் துறை மரியாதையுடன் சிந்துபூந்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- இறுதி சடங்கில் காவல் துணை ஆணையர் (கிழக்கு), திருநெல்வேலி மாநகரம் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
0 Comments