

திருநெல்வேலி – மார்ச் -24,2025
Newz – Webteam
அருணாச்சலம் வயது 58, இவர் தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்த்தவர். இவர் தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.இவர் மனைவி பெயர் ஈஸ்வரி மீனா இவருக்கு ஒரு பெண் மற்றும் ஆண் வாரிசுகள் உள்ளனர்.
20/03/2025 அன்று பிற்பகல் சுமார் 03:30 மணியளவில் இவர் வீட்டின் பின்பக்கத்தில் தகர கூரையின் மேல் கால் வைத்த போது எதிர் பாரத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் மேலிருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சுயநினைவின்றி 20/03/2025 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தபின் சிகிக்சையில் பலனில்லாத காரணத்தினால் அங்கிருந்து 22/03/2025 அன்று காலை 07 :45 மணியளவில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர் மற்றும் மூளையில் கசிவு அதிகமாக இருப்பதை உறவினர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தனர். 22/03/2025 அன்று மூளையின் செயல்பாடு இருப்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அந்த பரிசோதனை அறிக்கையில் அவருடைய மூளை செயல்பாடு இல்லை என்பதைதெளிவாக உறவினர்களிடம் எடுத்துரைத்தனர்.
அதன் பின்பு அவரது உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது உடலுறுப்புகளான கல்லிரல், இருசிறு நீரகங்கள் மற்றும் திசுக்களான கருவிழிகள் தானமாக அளிக்க முன்வந்தனர். 23/03/2025 அன்று உடலுறுப்பு தானம் மேற்கொள்ளப்பட்டது. பின்பு 23/03/2025 உடற்கூறாய்வு மேற்கொள்ளபட்ட பின்பு 24/03/2025 அன்று காலை 09:00 மணியளவில் இறுதி மரியாதையுடன் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளது.
0 Comments