தூத்துக்குடி – ஜீன் -13,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள குற்றவியல் வழக்குகளை நீதிமன்ற வழக்கு விசாரணை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு (Trial Monitoring officers) சாட்சிகளை விரைந்து ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளை, நீதிமன்ற வழக்கு விசாரணை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு (Trial Monitoring officers) சாட்சிகளை விரைந்து ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அறிவுரைக் கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளை காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு வழக்குகளை கண்காணித்து, சாட்சிகளை காலதாமதமில்லாமல் ஆஜர்படுத்துதல் மற்றும் நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெறுவதற்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணை கண்காணிப்பிற்கான (Trial Monitoring) இணையதள தரவுதளத்தை (Google Sheet) உருவாக்கிய தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அபிராமி அவர்களுக்கும், அழைப்பாணைகளை சார்பு செய்து சாட்சிகளை காலதாமதம் இல்லாமல் ஆஜர்படுத்தி நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெறுவதற்கு உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய தலைமை காவலர் சுடலைமுத்து மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் வேல்முருகன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் உட்பட தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments