திருநெல்வேலி – ஜீலை -30,2025
Newz – Webteam


திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் சரகம், கே.டி.சி. நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரி பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்
.
இந்நிலையில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப. அவர்கள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டுள்ளார்.
0 Comments