சென்னை – நவ -19,2024
Newz – Webteam
தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு விளையாட்டு திறனை மேம்படுத்தவும், காவல்துறையினரது விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிகளை பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
67-வது அகில இந்திய காவல்துறை தடகள போட்டிகள் 10.12.2018 முதல் 14.12.2018 வரை புதுடெல்லியில் வைத்து நடைப்பெற்றது. அப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை தடகள அணி சார்பில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்ற 07 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்க தொகை ரூபாய் 22,00,000/- (ரூபாய் இறுபத்து இரண்டு லட்சம் மட்டும்) காசோலையை தமிழ்நாடு டிஜிபியால் வழங்கப்பட்டது.
மேலும், 73 வது அகில இந்திய காவல்துறை தடகள குழு போட்டிகள் – 2024, 10.11.2024 முதல் 14.11.2024 வரை புதுடெல்லியில் வைத்து டெல்லி காவல்துறையால் நடத்தப்பெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை தடகள மற்றும் சைக்கிள் அணியை சார்ந்த 76 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துக்கொண்டு 3-தங்கம், 4-வெள்ளி, 5- வெண்கலம் ஆக மொத்தம் 12 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேற்கண்ட வீரர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கினார். மேலும் ஆயுதப்படை, கூடுதல் டிஜிபி ஐஜி ஆகியோர் உடனிருந்து மேற்கண்ட வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
0 Comments