சென்னை – ஜன -20,2024
Newz – webteam
தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப் பின்னல் அமைப்பு ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி துறை அமைப்பினை CCTNS / ICJS செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து வரும் மாநிலங்களுக்கு, ஒவ்வொரு வருடமும் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்டங்கள் மாநகரங்களிலிருந்து பெறப்படும் பரிந்துரைகளை கூர்ந்தாய்வு செய்து தகுதியானவர்களை தேர்வு செய்யு பொருட்டு. தமிழக டிஜிபி ,மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் காவல்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் நோடல் ஆபிஸர் அபின் தினேஷ் மோதக் இ.கா.ப தலைமையில் ஆசியம்மாள். இ.கா.ப காவல்துறை தலைவர், தலைமையிடம் மற்றும் திஷா மிட்டல், இ.கா. காவல்துறை துணை தலைவர். தொழில் நுட்ப பிரிவு ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்றினை அமைத்துள்ளார். மேற்கண்ட குழுவினரால் தேசிய ஆவணக் காப்பகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பின்வரும் மூன்று காவல் அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
அதில் தமிழகத்தில் தேர்வு செய்யபட்டுள்ள அதிகாரிகளான திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் உதவி ஆய்வாளரான மார்கெரட் தெரேசா, சென்னை மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை காவலரான எஸ்.ஸ்ரீரங்கன். அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை காவலரான ஏ.ஜான்பால் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டு புதுடில்லியில், டிசம்பர்
21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற்ற CCTNS ICJS திட்ட செயல்பாடுகளில்
நற்செயல்பாடுகள் குறித்து 5வது ஆண்டு
கூட்டத்தின்போது, குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்
பின்னல் அமைப்பு ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி துறை அமைப்பினை CCTNSICJS. செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ள தமிழக காவல்துறையினை சேர்ந்த மேற்கண்ட காவல் அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
0 Comments