சென்னை – செப் -21,2023
newz – webteam
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிவைகளை கரைக்க 18.09.2023 அன்று தொடங்கி 24.09.2023 வரை ஊர்வலங்கள் மற்றும் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 20.09.2023 வரை தமிழ்நாடு முழுவதும் 18,357 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. மேலும், 21.09.2023 அன்று 61 ஊர்வலங்கள் நடத்தப்பட்டு 1664 சிலைகளும் கரைக்கப்படுகின்றன, 22.09.2023 அன்று 55 ஊர்வலங்களில் 1160 சிலைகளும் 23.09.2023 அன்று 18 ஊர்வலங்களில் 390 சிலைகளும் மற்றும் 24.09.2023 அன்று 22 ஊர்வலங்களில் 3368 சிலைகளும் எடுத்துச்செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
அனைத்து நீர் நிலைகளுக்கும் காவல்துறையினரால் தகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஏதுமின்றி அனுமதிக்கப்படாத இடங்களில் அஜாக்கிரதையுடன் பொதுமக்கள் தன்னிச்சையாகச் சிலைகளை கரைக்க செல்வதால் உயிர்ச் சேதம் நடக்க வாய்ப்புள்ளது.
எனவே, பொது மக்கள் இது போன்ற சம்பலங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளைக் கரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தனிநபர்கள் பாரம்பரியமாக கரைக்கின்ற நீர்நிலைகளில் பெரியோர்களின் மேற்பார்வையில், கரைக்குமாறும் சிறார்கள் நீர்நிலைகளின் அருகில் செல்லாத வண்ணம் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments