தென்காசி – ஜன -10,2025
Newz -webteam
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள், CCTV கேமராக்களின் செயல்பாடுகள் மற்றும் ஆயுதம் வைப்பறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பணியின் போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். பின்பு இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக சொக்கம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
0 Comments