மதுரை – ஜன -11,2025,
Newz -webteam
மதுரை மாநகர் காவல் – GPS கருவிகள் பொருத்தப்பட்ட ரோந்து மற்றும் இதர பணிகளுக்கான காவல் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி.
மதுரை மாநகரில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் போலிசிங் திட்டத்தின் படி அவசரகால “100 அழைப்பு புகார்கள்” மூலம் காவல் பணியை துரிதபடுத்தவும் காவல்துறை வாகனங்களின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்கவும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் மீதான குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யும் பொருட்டும் மதுரை மாநகரில் காவல் கட்டுபாட்டு அறை மூலம் இயங்க கூடிய 63 இரு சக்கர ரோந்து வாகனங்கள், 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 9 Delta ரோந்து வாகனங்கள் மற்றும் 8 வழிக்காவல் ரோந்து வாகனங்கள் உட்பட்ட 101 காவல் வாகனங்களிலும் GPS கருவிகள் பொருத்தப்பட்டு காவல் வாகனங்களை ரோந்து பணிக்கு தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு டேவிட்சன் தேவஆசீர்வாதம், இ.கா.ப., இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் லோகநாதன், இ.கா.ப., , மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு, தலைமையிடம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments