திண்டுக்கல் – ஜீலை – 07,2023
newz – webteam
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி ஒட்டன்சத்திரம் உட்கோட்டம் காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் இன்று ஓட்டன்சத்திரம் உட்கோட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் தாராபுரம் ரோட்டில் உள்ள PNK மஹால் வரை சுமார் 2 கி.மீ தூரம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கொடியஅசைத்து துவக்கி வைத்தார். இதில் ஒட்டன்சத்திரம் பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சுமார் 250 பேர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டார்
0 Comments