சென்னை -ஆவடி – 23,2023
newz – webteam
போலி பத்திரம் மூலம் 1,கோடி 7,லட்சம் மோசடி ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் சென்னை கே.கே.நகர் நகரில் வசித்துவரும் ராமகிருஷ்னன் மகன் சீனிவாசன் என்பவர் கொடுத்த புகார் கொடுத்துள்ளார் அதில் நான் பெங்களுரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் இந்நிலையில் வீட்டு மனை வாங்குவதற்கு முயற்சித்த போது சிந்துஜா ரியல் எஸ்டேட் நடத்திவரும் பண்பரசன் என்ற இடைதரகர் மூலம் பூந்தமல்லி செந்தூர்புரம் காட்டுபாக்கம் பிளாட் எண்.81 ல் (2350 சதுரடி) இடத்தின் அசல் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் மேற்படி இடத்தின் உரிமையாளரான கல்யாணி க/பெ தியாகராஜன் என்பவரின் பொது அதிகார முகவர் என அந்தோனிஜெனித் என தெரிவித்துள்ளார். பண்பரசன் அலுவலகத்தில் வைத்து மேற்படி இடத்திற்கு ரூ.99,00,000/- விலை பேசி அரசாங்க வழிகாட்டி மதிப்பு ரூ.56,75,250/- மட்டும் காசோலையாகவும் ரூ.42,24,750/- பணமாகவும் பெற்று குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு கிரையம் செய்து கொடுத்துள்ளார்கள்.
மனுதாரர் வாங்கிய இடத்திற்கு சென்று பார்வையிடும் போது அதன் உரிமையாளரான கல்யாணி க/பெ தியாகராஜன் என்பவர் தனது இடத்தை யாருக்கும் விற்பனை செய்யவில்லை எனவும் அசல் ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். மனுதாரர் சந்தேகமடைந்து சொத்திற்கு வில்லங்கசான்று போட்டு பார்த்த போது போலியான ஆவணத்தினை உருவாக்கி எதிரிகள் விற்பனை செய்து சுயலாபம் அடைந்துள்ளார்கள். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 7 லட்சம் ஆகும்.
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் மீது ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் IPS., மற்றும் காவல் துணை ஆணையாளர் .பெருமாள் IPS., ஆகியோரின் உத்தரவின் பேரில் போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய நபரான சென்னை மாங்காட்டை சார்ந்த பலராமன் மகன் பண்பரசனை 53,கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு தலைமறைவான பன்பரசனை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் அவர்களது குழுவினரை ஆவடி காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்
0 Comments