தூத்துக்குடி – ஆகஸ்ட் -25,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பளார் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு நாளை (26.08.2023) எழுத்து தேர்வு அறிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 5144 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
மேற்படி நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 4 தேர்வெழுதும் மையங்களில் நடைபெற உள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (25.08.2023) தூத்துக்குடி அருணாசலம் மாணிக்கவேல் மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சு பணியார்களுக்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தேர்வுக்கான பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் மேற்பார்வையில் 7 காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 460 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் . கோடிலிங்கம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி உட்கோட்டம் சத்தியராஜ், தூத்துக்குடி ஊரகம் சுரேஷ், திருச்செந்தூர் வசந்தராஜ், மணியாச்சி லோகேஸ்வரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மாவட்ட ஆயுதப்படை புருஷோத்தமன், சென்னை பொருளாதார குற்றப் பிரிவு .
லில்லி கிரேஸ் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுலக கண்காணிப்பாளர் மாரியப்பன் உட்பட அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments