ஆவடி – அக் -26,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் இணையதள குற்றப்பிரிவில் மனுதாரர் கார்த்தி(வ/36), என்பவர் புகார் கொடுத்துள்ளாரஂ , “தனக்கு Telegram upp மூலமாக” வந்த பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் டெலிகிராம் முகவரியில் நுழைந்து கவர்ச்சிகரமான ஆசை வார்த்தைகளை கூறி அவர்களின் தகுதிக்கு மீறி மாத சம்பளம் வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் என்று கூறி அவர்களின் பேன் கார்ட், ஆதார் கார்ட் ஆகியவற்றை சேகரித்து குறிப்பிட்ட தொகையை பல தவணைகளில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த சொல்லியும் பின்னர் அந்த டெலிகிராம் முகவரியை முற்றிலும் தொடர்பு இல்லாதவாறு செயல் இழக்க செய்துவிட்டதாகவும், எனவே பகுதி நேர வேலை தருவதாக நம்பிக்கை மோசடி செய்து டெலிகிராம் செயலி மூலம் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்தும் தன்னிடம் இருந்து சுமார் ரூபாய் 10,00,000/-(பத்து இலட்சம்) பணத்தை ஆன்லைன் வங்கி கணக்கு மூலம் மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரை பெற்று ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் உத்தரவின் பேரில் இணையதள குற்ற பிரிவு ஆய்வாளர் மகாலஷ்மி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் டெலிகிராம் செயலி மூலமாக வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை தேடுபவர்களை தங்களது ஆசை வார்த்தைகளால் மோசடி வலையில் சிக்க வைத்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் ஆன்லைனில்
வேலை தேடி வரும் நபர்களை ஏமாற்றி அந்த பணத்தை செலுத்த YES வங்கி கணக்கை பயனஂபடுத்தியுள்ளனர் அதை பற்றி விசாரித்த போது, அந்த வங்கி கணக்கின் உரிமையாளரான செல்வம் என்பவரை போலீசார் விசாரணைக்கு செய்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் மிகப்பெரிய ஆன்லைன் மோசடி சமுக வலைதளம் மூலமாக நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இணையதள குற்றவாளிகளான A1.விவேகானந்தன் (44) த/பெ ஜெயபிரகாஷ்,, A2 ஹலிகுல் ஜமால் (வ/42), த/பெ ஜக்கரியா, நெ.23/54, கொத்தவால் தெரு, லால்பேட்டை, கடலூர் மாவட்டம் தற்போது ஹபிபுல்லா லாட்ஜ் சேத்துபேட் சென்னை, A3, அஷ்கர் ஷெரிப் (வ/38), த/பெ உமர் ஷெரிப் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் மூன்று பேரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டும் தங்களுக்கு கமிஷன் தொகை மட்டுமே கிடைக்கும் என்றும் வேலையில்லாதவர்களிடம் ஆன்லைன் மூலமாக வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் பேன் கார்ட், ஆதார் கார்ட் ஆகியவற்றை பயன்படுத்தி YES Bank ல் புதிய வங்கி கணக்கை துவக்கி அதன் மூலம் பெறப்படும் பணத்தை சீனா, மலேசியா ஆகிய வெளிநாட்டில் இருந்து செயல்படும் ஆன்லைன் ரம்மி மற்றும் இந்த ஆனஂலைன் மோசடி குற்றங்களை ஆப்ரேட் செய்யும் உரிமையாளர்கள் மூலம் US வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தது கண்டறியப்பட்டது. மேற்கண்ட இணையதள குற்றவாளிகளை கண்டுபிடித்ததன் மூலம் வெளிநாட்டு சூதாட்ட செயலி மோசடி பேர்வழிகளின் சூழ்ச்சி செயல் தடுக்கப்பட்டுள்ளது- இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும்
சமூக
வலைதளங்களில் Part Time Job Offer மற்றும் onine Rummy Gambling App மற்றும் இதர ஆன்லைன் மோசடி குற்றங்களை ஆபரேட் செய்யும் உரிமையாளர்கள் மூலம் US வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தது கண்டறியப்பட்டது. மேற்கண்ட இணையதள குற்றாணிகளை கண்டுபிடித்ததன் மூலம் வெளிநாட்டு சூதாட்ட செயலி மோசடி பேர்வழிகளின் சூழ்ச்சி செயல் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை மற்றும் onine Rummy Gambling prize ஆகியவை தொடர்பான எந்த ஒரு lirkc. App- ஐ தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், தவறுதலாக மேற்படி இணையதன குற்ற செயலில் பணத்தை இழந்தால் 24 மணி நேரத்திற்குள் Tol Free எண்1930 என்பதை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியும் எச்சரிக்கையுடன் இருக்க ஆவடி காவல் ஆணையாளர் இந்த பத்திரிக்கை செய்தி மூலம் பொது மக்களுக்கு அறிவுறித்தியுள்ளார்.
0 Comments