சென்னை – ஆவடி ,செப் -22,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகதிற்கு உட்பட்ட அனைத்து காவல் எல்லைகளில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், தனிநபர்கள் என மொத்தம் 649 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. கரைக்கப்பட்ட சிலைகளில் மீதமுள்ள 440 சிலைகள் 24.09.2023 அன்று கரைக்கப்படும். பின்வரும் குறிப்பிட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்பட அனுமதிக்கப்படுகின்றன.
1 பட்டினப்பாக்கம் கடற்கரை
திருநின்றவூர் சந்திப்பு – பட்டாபிராம் (இந்து கல்லூரி) – ஆவடி ரவுண்டானா – திருமுல்லைவாயல் சந்திப்பு – அம்பத்தூர் OT – அம்பத்தூர் எஸ்டேட் – கொரட்டூர் சந்திப்பு – பட்டினப்பாக்கம் – கரைக்கும் இடம் – பட்டினப்பாக்கம்.
திருவேற்காடு – வேலப்பஞ்சாவடி – வானகரம் – கோயம்பேடு – வடபழனி – கோடம்பாக்கம் – வள்ளுவர்கோட்டம் – பட்டினப்பாக்கம் – கரைக்கும் இடம் – பட்டினப்பாக்கம்.
நாசரேத்பேட்டை-பூந்தமல்லி- காட்டுப்பாக்கம்-அய்யப்பன்தாங்கல்- போரூர் சந்திப்பு-ஆற்காடு சாலை- பட்டினப்பாக்கம்.
மணலி மார்க்கெட் சந்திப்பு – காமராஜ் சாலை – மஞ்சம்பாக்கம் – மாதவரம் பேருந்து நிலையம் – மூலக்கடை – வியாசர்பாடி – பட்டினப்பாக்கம். வழி – மணலி எக்ஸ்பிரஸ் சாலை – எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை – திருவொற்றியூர் உயர் சாலை- பட்டினப்பாக்கம்.
- ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் கடற்கரை.
CPCL நிறுவனம்- MFL சந்திப்பு – சத்தியமூர்த்தி நகர் – எண்ணூர் – கரைக்கும் இடம் – ராமகிருஷ்ணா நகர் கடல் கரை, எண்ணூர். - பழவேற்காடு ஏரி.
மீஞ்சூர் ரயில்வே கேட் – அரியன்வயல் – திருவாலவயல் – காட்டூர் – சதாமஞ்சி – பழவேர்காடு ஏரி. - நீலாங்கரை கடற்கரை
குமணஞ்சாவடி- மாங்காடு – குன்றத்தூர் – அனகாபுத்தூர் – பல்லாவரம் – மீனம்பாக்கம் – தில்லைகங்காநகர் சுரங்கப்பாதை – வேளச்சேரி – எஸ்ஆர்பி டூல்ஸ் – நீலாங்கரை கேட்.
வினாயகர் சிலை நீரில் கரைக்கும் நிகழ்வை சுமூகமாக நடத்த போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
add
0 Comments