திண்டுக்கல் – நவ -27,2023
newz – webteam
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி பகுதியில் 2019-ஆம் ஆண்டு ராமசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி(52) என்பவரை பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தென்னரசன், நீதிமன்ற தலைமை காவலர் தனராஜ் மற்றும் அரசு உதவி வழக்கறிஞர் சிவக்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று பழனி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குற்றவாளி தண்டபாணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
0 Comments