கிருஷ்னகிரி – ஜன -22,2024
Newz – webteam
ஜெயா டிவியில் திமுக மாநாட்டுப் பணிகளுக்காக காவல் நிலையம் பூட்டப்பட்டதாக தகவல் ஒளிபரப்பானது பற்றியமறுப்பு அறிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம்
கடந்த 21-01-2024 ம் தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டிற்காக மகாராஜாகடை காவல் நிலையம் பூட்டிக்கிடப்பதாக ஜெயா டிவி காணொளி காட்சியுடன் செய்தியை ஒளிபரப்பியது சம்மந்தமாக விசாரணை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி உட்கோட்டம் மகாராஜாகடை காவல் நிலையமானது ஆத்திரா மாநில எல்லையை ஒட்டியும் மலைகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியும்
அமைந்திருப்பதாலும், யானைகள், குரங்குகள் மற்றும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், காவல் நிலையத்தின் இரும்பு கிரில்கேட் வழக்கமாக இரவு நேரம் முதல் காலை 06.00 மணி வரை பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூடப்படும். இருப்பினும் கிரில்கேட் பூட்டப்படாது. வெளியில் வந்து செல்பவர்களை கண்காணிக்க முடியும் வழக்கம் போல் காவல் நிலைய பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.
இந்நிலையில் 20:012024 ம் தேதி Grl PC 1584 முருகேசன் மகாராஜாகடை காவல் நிலையத்தில் பாரா பணியில் இருந்துள்ளார். மேலே சொன்ன காரணத்தால் கிரில்கேட் இரவு நேரத்தில் வழக்கம் போல் மூடப்பட்டிருந்துள்ளது.
21-01-2024 ம் தேதி காலை 05.00 மணியளவில் நியூஸ்.7 தொலைக்காட்சி நிருபர் பிரகாஷ் என்பவர் மகாராஜாகடை காவல் நிலையம் வழியாக மகாராஜாகடை முனியப்பன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது காவல் நிலையத்தின் இரும்பு கிரில்கேட் மூடப்பட்டிருந்ததை வீடியோ எடுத்து அன்றைய தினமே காலை 9 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து பாரா காவலரிடம் கேட்டதாகத் தெரிகிறது. பாரா காவலர் GrI PC 1584 Tr. முருகேசன் மேற்கண்ட காரணத்தை சுட்டிகாட்டிவிட்டு 100 (100 Call)செய்தது சம்மந்தமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற நிருபர் மேற்கண்ட விடியோவை ஜெயா டிவி சேனலுக்கு கொடுத்துள்ளார். ஜெயா டிவி நிருபர் மேற்படி வீடியோவை மிகைப்படுத்தி காவல் நிலையம் பூட்டப்பட்டதாக தவறான தகவலை ஜெயா டிவியில் வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments