திருநெல்வேலி -நவ -04,2024
Newz -webteam
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., அவர்களின் நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு பொறுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் .ரமா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கைபேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் மதிப்பு Rs. 18,58,649 /- ஆகும். மேலும் காணாமல் போன (அ) தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன (அ) தவறவிட்ட செல்போன் தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம் (அ) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதினை பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு புகார் கொடுத்தபின் மனுதாரர் செல்போன் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு Block செய்யப்படும். மேலும் மனுதாரர் செல்போனில் புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய நபரின் விபரங்கள் தொடர்பான அறிவிப்பு மனுதாரருக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் உடனடியாக அனுப்பப்படும். இதன் மூலமாக தொலைந்து போன (அ) தவறவிட்ட செல்போனை உடனடியாக மீட்க முடியும். மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் (அ) https://cybercrime.gov.in/ என்ற இணைய தளத்தில் புகார் அளிக்கலாம்.
0 Comments