திருப்பத்தூர் -ஜீலை -11,2024
Newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம்
பழுதடைந்த காவல் குடியிருப்புகளை மறு சீரமைக்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., துவங்கி வைத்தார். இன்று
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்தில் பழுதடைந்த வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் குடியிருப்பு மற்றும் நாட்றம்பள்ளி காவல் குடியிருப்புகளை மறு சீரமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஆல்பர்ட் ஜான், இ.கா.ப.,நேரில் பார்வையிட்டு பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாட்டு காவலர் வீட்டு வசதி கழக துணை பொறியாளர், வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார், வாணியம்பாடி நகர காவல் நிலைய ஆய்வாளர் .மனோன்மணியம், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் .லதா, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
0 Comments