
திருநெல்வேலி – ஆகஸ்ட் -31,2025
Newz – Webteam
சுரசியா வயது 18, தூத்துக்குடியில் உள்ள கல்லூரில் B.com பயின்றுவருகிறார் அவர் குடும்பத்துடன் அன்று 24.08.2025 மாலை சுமார் 05:00 மணி அளவில் நான்கு சக்கர வாகனத்தில் தூத்துக்குடியை நோக்கி செல்லும் போது எதிர்பாரத விதமாக வாகனத்தின் டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய வாகனம் சாலையின் பக்கவாட்டு சுவரில் இடித்து நிலைதடுமாறி கவிழ்ந்தது அதில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் பல்நுட்புணர் மலர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார் மற்றும் வாகனத்தில் பயணித்த சுரசியாவின் தாயாரும் பலியானார்.
வாகனத்தை ஓட்டிய தந்தை மற்றும் செல்வி ரசியாவும் அவரது சகோதரரும் பலத்த காயங்களுடன் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
உள்ள அவசர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 24.08.2025 அன்று சொந்தவிருப்பத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்பு செல்வி.சு.ரசியாவின் உடல் நிலை மோசமாக உள்ளதை அறிந்த உறவினர்கள் மீண்டும் 30.08.2025 திருநெல்வே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரசோதித்த மருத்துவர்கள் அவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை தெளிவாக உறவினர்களுக்கு எடுத்துரைத்தனர். 30.08.2025 அன்று மூளை செயல்பாடு, இருக்கிறதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை முடிவில் அவருடைய மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்,
பின்பு குடும்ப உறுப்பினர்களுடன். ஆலோசித்து செல்வி.சுரசியாவின் உடலுறுப்புகளான கல்லீரல், இருசிறுநீரகம் மற்றும் கருவிழிகள் தானமாக அளிக்க முன் வந்தனர். எனவே அதன் அடிப்படையில், 31.08.2025 அன்று அவரது உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டு, பின் 31.08.2025 அன்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்ட பின்பு | மாலை 05.00 மணி அளவில் இறுதி மரியாதையுடன் அவரது
உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.
0 Comments