கோயம்புத்தூர் – ஜீன் -20,2023
newz – webteam
கோவை காவல் சரக குற்ற விவாதிப்பு கூட்டம் இன்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர்.சுதாகர்., இ.கா.ப., மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார்., இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. இவ்விவாதிப்பு கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கோவை சரகத்திற்கு உட்பட்ட 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 30 உதவி/துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.
0 Comments