வேலூர் – மே – 30,2023
newz – webteam
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர்க்ரைம்
காவல் நிலையத்திற்கு, சைபர்க்ரைம் உதவி எண் 1930-ல் வந்த
புகாரில் மனுதாரரின் செல்போனிற்கு TATA CAPITAL நிறுவனத்தில்
இருந்து லோன் தருவதாக வந்த போலியான குறுஞ்செய்தியை நம்பி
191,544/-ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணனின்
உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல்
கண்காணிப்பாளர் N.கோட்டீஸ்வரன் தலைமையிலான
போலீசார் துரிதமாக செயல்பட்டு மனுதாரர் இழந்த பணத்தை மீட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனுதாரரை நேரில் அழைத்து
இன்று 30.05.2023ம் தேதி இழந்த பணத்தை மனுதாரருக்கு ஒப்படைத்தார்..
0 Comments