திருநெல்வேலி – மார்ச் – 26,2026
Newz – webteam

மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு ப்ரௌனி என பெயர் சூட்டிய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்
திருநெல்வேலி மாநகர காவல் துறையில் செயல்படும் மோப்ப நாய் பிரிவில் தற்போது வெடிகுண்டு வழக்கு துப்பறியும் அலுவலில் 02 மோப்ப நாய்களும்(1.ரெமோ, 2.கூப்பர்), குற்ற வழக்குகளை துப்பறியும் அலுவலில் 1 மோப்ப நாய் (பரணி), மற்றும் போதை பொருட்கள் துப்பறியும் அலுவலில் 1 மோப்ப நாய் (லக்கி) என 4 மோப்ப நாய்கள் அலுவலில் இருக்கின்றது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு குற்ற வழக்குகளை துப்பறியும் அலுவலுக்காக புதிதாக நாய் குட்டி ஓன்று வாங்கப்பட்டுள்ளது. இன்று 26.03.2026ஆம் தேதி புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் இ.கா.ப., ப்ரௌனி ( Brownie ) என பெயர் சூட்டினார் . மேலும் மோப்ப நாய்களை நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், நல்ல முறையில் பராமரிக்கவும் மோப்ப நாய் பிரிவு காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
உடன் காவல் துணை ஆணையர் விஜயகுமார் (கிழக்கு), மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 Comments