மதுரை – பிப் -17,2024
Newz – webteam

மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலைய காவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆயுதப்படை வினோத்குமார் ஆகிய இருவரும் நேற்று மாலை இரு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தத்தனேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஆட்டோவில் நின்றிருந்த நபர்களை விசாரித்த போது அவர்கள் 4.300 கிலோகிராம் மதிப்புள்ள கஞ்சாவை ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.எனவே அந்த நபர்களையும் அவர்கள் வைத்திருந்த ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து செல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர ஆணையர் முனைவர் லோகநாதன் IPS., காவலர்களை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பண வெகுமதியும் கொடுத்து கௌரவித்தார்
0 Comments