மதுரை – ஜன -11,2024
Newz – webteam



மதுரை மாநகர காவல்துறை சார்பாக மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்புரம் மற்றும் ஓபுளா படித்துறை ஆகிய இரண்டு இடங்களில் காவல் உதவி மையங்களையும் மற்றும் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்திலிருந்து ஆசாரி தோப்பு வரையிலான வைகை வடகரை பகுதிகளில் 28 சிசிடிவி கேமராக்களை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்.IPS. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது மதுரை மாநகர வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் சினேக பிரியா, IPS.போக்குவரத்து துணை ஆணையர் குமார். தல்லாகுளம் சரக காவல் உதவி ஆணையர் த சம்பத், மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர் சேதுமணிமாதவன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments