ஆவடி – ஆகஸ்ட் -22,2023
newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி கி.சங்கர் இ.கா.ப., காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று 23.08.2023 நடத்தப்பட்ட குறை தீர்ப்பு முகாமில் நிலுவையில் இருந்த 90 புகார் மனுக்களில் 59 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 45 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட 108 மனுக்களில் தீர்வுகாணப்படாத 28 மனுக்களின் மனுதாரர்களை நேரில் வரவழைத்து உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி காவல் ஆணையாளர் தெரிவித்தார்.
0 Comments