திருவாரூர் – டிச -25,2023
Newz – webteam
திருவாரூர் மாவட்டம்
வழிப்பறி குற்றத்தில் தொடர்புடைய ரவுடி காவலர்களிடம் இருந்து தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் இடது காலில் எலும்பு முறிவு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் சரகம், சிங்கலாந்தி ரோடு, பாரதியார்தெருவை சேர்ந்த சுஜிலி (எ) சாம்ராஜ் 28/23, த/பெ.ராஜாஜி திருதுறைபூண்டி காவல் நிலையத்தில் அடிதடி, கஞ்சாவிற்பனை, பொதுசொத்தை சேதப்படுத்துதல், போன்ற குற்றத்திற்காக பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் தற்போது நிலுவையில் இருந்துவருகிறது. திருத்துறைப்பூண்டி காவல்நிலைய ரவுடி லிஸ்டில் இருக்கும் இவர் கடந்த ஏப்ரல் மாதம் கஞ்சா விற்ற குற்றத்திற்காக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நீதிமன்ற பினைபெற்று கடந்த மாதம் வெளியேவந்துள்ளார்.
இந்நிலையில் மேற்கண்ட சுஜிலி (எ) சாம்ராஜியும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான அஜித்குமார், த/பெ.செல்லையன், களையாஞ்சேரி, தகட்டுர், பேச்சுகாடு, நாகப்பட்டினம் மாவட்டம் என்பவரும் நேற்று இரவு சுமார் 11.15 மணிக்கு திருத்துறைப்பூண்டி நகரம், ஆஸ்பத்திரிரோட்டில் உள்ள விதுலா என்டர்பிரைசஸ் என்ற உரக்கடையினுள் சென்று பூச்சி மருந்து வாங்குவதுபோல் நடித்து உரக்கடையின் உரிமையாளர் சரவணபவன் 53/23, த/பெ.மகாலிங்கம், முதிலியார்தெரு, பாமனி என்பவரை கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த ரொக்கம் ரூ.65000 மற்றும் ரூ.18000 மதிப்புள்ள செல்போனையும் பறித்துசென்றுள்ளனர். இதுதொடர்பாக மேற்கண்ட சரவணபவன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் மேற்கண்ட சுஜிலி மற்றும் அஜித்குமார் மீது கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட குற்றத்தில் தொடர்புடைய இருவரையும்கழனியப்பன் காவல் ஆய்வாளர் திருத்துறைப்பூண்டி அவர்களின்
தலைமையிலான குழுவினர் தேடிசென்றபோது இன்று மதியம் 03.30
மணியளவில் சிங்கலாந்தி பாலம் அருகில் நின்றுகொண்டிருந்த சுஜிலி (எ)
சாம்ராஜ் மேற்கண்ட காவல் ஆய்வாளர் தலைமையிலான போலிசாரை கண்டதும்
பாலத்தில் இருந்து குதித்து தப்பித்து ஓடமுயன்றுள்ளார். அப்போது அவர்
பாலத்தில் இருந்து குதித்ததில் அவரின் இடதுகால் முட்டிக்கு கீழ் எலும்பு
முறிவு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவலர்கள் அவரை உடன் மீட்டு
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
பின்னர் மேற்படி நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து வழிப்பறி செய்த
தொகை ரூ.12,000 மீட்கபட்டு, மேற்கண்ட வழக்கு தொடர்பாகவும் தலைமறைவு
எதிரியான அஜித்குமார் தொடர்பாகவும் தொடர்ந்து விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
0 Comments