நாமக்கல் – மே,29,2024
Newz -,webteam
நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழாவில் இளைஞர்கள் கஞ்சா போதையில் தகராறு செய்ததாக வெளியான செய்திக்கு தமிழக காவல்துறை மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டிருப்பதாவது
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த 23.05.2024-ம் தேதி சுமார் 5,மணிக்கு திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஊர்க் காவல் படையை சேர்ந்த 1.அருள்ஜோதி, 2. முகிலன் 3.அர்ஜுனன் மற்றும் பெண் காவலர்கள் போக்குவரத்து பணியிலிருந்த போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த விஜய் மற்றும் தாமரைக் கண்ணன் ஆகியோர்களை இங்கு தேர் இருப்பதால் இந்த வழியாக செல்ல அனுமதி இல்லை என்று கூறியதற்கு விஜய் மற்றும் தாமரைக் கண்ணன் இருவரும் தகராறு செய்து கையால் அடித்து பணிசெய்ய விடாமல் தடுத்ததற்காக திருச்செங்கோடு நகர காவல் நிலைய குற்ற எண், 162/24 U/s. 294 (b), 323, 353, 506 (i) IPC & 4 of TNWH Act வழக்கு பதிவு செய்து, சம்மந்தப்பட்ட நபர்களை 25.05.2024-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
சில குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவத்தை மிகைப்படுத்தி இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்து தகராறு செய்ததாக, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களில் இது போன்ற தவறான தகவல்களை பரப்பிய சமூக வலைதளங்களை மாவட்ட Cyber Crime மூலமாக கண்டறியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நாமக்கல் மாவட்டக் காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.
0 Comments